கரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில், மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகம் முழுவதும், நேற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 30 சதவீதத்துக்கும் மேலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தற்செயல் விடுப்பு எடுத்து, சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், பிறகு ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.இதையடுத்து, நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் வேலுமணி, தமிழ்மணியன், பொன் ஜெயராம், பெரியசாமி உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.