ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுசுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுசுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனுகரூர்:-கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், சட்டத்திற்கு புறம்பான காரணங்களை கூறி, ஆர்ப்பாட்டம் நடத்த கரூர் டவுன் போலீசார் அனுமதிக்கவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளி நிறைந்த பகுதி மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என, போலீசார் காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால், வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்த, போலீசார் அனுமதிக்கப்பட்ட இடமாக, தலைமை தபால் நிலையம் பகுதி உள்ளது. அங்கு, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. உண்மையாக காரணங்களை மறைத்து, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.