உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்மேற்கு பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

தென்மேற்கு பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

கரூர் : காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து கரூர் மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் ஜன., முதல் டிச., வரை ஆண்டு சராசரியாக, 652.20 மி.மீ., மழை பெய்ய வேண்டும். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. மேட்டூர் அணையியில் இருந்து எதிர்பார்த்த அளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கரூர் மாவட்ட காவிரியாற்றில் போதுமான தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான பகுதிகள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அமராவதி ஆற்றின் நிலையும் அதுதான். போதிய மழை இல்லாததால் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிர்களின் சாகுபடியும் கேள்விக்குறியாகி விட்டது.கரூர் மாவட்ட விவசாயிகள் வரும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், கரூர் மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக காற்றுடன் லேசான மழை பெய்தது. கரூர் மாவட்ட விவசாயிகள், தென்மேற்கு பருவ காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டும் என, வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ