உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெருங்கும் பொங்கல் பண்டிகை பானை விற்பனை ஜோர்

நெருங்கும் பொங்கல் பண்டிகை பானை விற்பனை ஜோர்

கரூர், பொங்கல் பண்டிகைக்காக, மண் பானை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூரில் மண்பாண்டங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. லாலாப்பேட்டை, குளித்தலை, வெள்ளியணை, கோயம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மண்பாண்ட தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு கடந்த, இரு மாதங்களாக பல்வேறு அளவுகளில் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.இந்நிலையில் வரும், 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் கரூர் உழவர் சந்தை, காமராஜ் சந்தை உள்ளிட்ட இடங்களில் மண் பாண்டங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலன்று குடும்பத்தினர் அனைவரும், அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அணிந்து வீடு முன் மண் அடுப்பு வைத்து, பொங்கல் பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.இதையொட்டி பொங்கல் பானை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அரை கிலோ, ஒரு கிலோ மற்றும் 2 கிலோ அரிசி சமைக்கும் வகையிலான பானைகள், 50 முதல், 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை