மேலும் செய்திகள்
தடுப்பில் மோதிய கார்
03-Jan-2025
பென்னாகரம்,: பிக்கிலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர், பூதிநத்தம், சக்கிலி நத்தம் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி, பென்னாகரம் துணை பி.டி.ஓ., சங்கீதாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.அதில், பூதிநத்தம் பகுதியிலிருந்து சங்கிலி நத்தம் கிராமத்துக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும், பெரியூர் புதுார் மற்றும் புதுார் மேடு பகுதியிலுள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றி, தினசரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குட்டகோசம் பள்ளம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமுள்ள குடியிருப்பு பகுதி அருகில், தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
03-Jan-2025