உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதி

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நாய் தொல்லையால் அவதிகரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரியில், உலா வரும் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர், வெள்ளியணை சாலை தான்தோன்றி மலையில், அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இரு வேளையும் வகுப்புகள் நடந்து வருகிறது. கல்லுாரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், வகுப்பறையில் பேராசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே, நாய்கள் உள்ளே சென்று ஹாயாக படுத்து கொள்கிறது. அதை விரட்டினால், கடிக்க வருவதாக மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர்.இதனால் காலை, மாலை நேரங்களில் கல்லுாரி மைதானத்தில் நடை பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். கல்லுாரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை