உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச வீட்டுமனையை அளந்துதராததால் திருநங்கைகள் மறியல்

இலவச வீட்டுமனையை அளந்துதராததால் திருநங்கைகள் மறியல்

இலவச வீட்டுமனையை அளந்துதராததால் திருநங்கைகள் மறியல்ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட ஆயிப்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோப்பம்பட்டியில், கடந்த ஜன., 13ல், திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் உமா வழங்கினார். இதையடுத்து அவர்கள், தங்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சர்வேயர் நில அளவீடு செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆகியோர், நில அளவை செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் அங்கிருந்து சென்றனர்.ஆத்திரமடைந்த திருநங்கைகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்துார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ