அ.தி.மு.க.,வினர் பேரணியாக சென்றுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க.,வினர் பேரணியாக சென்றுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்குளித்தலை: குளித்தலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாளையொட்டி, அவரது ஆட்சியின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம், மக்களுக்கு வழங்கப்பட்டது.குளித்தலை, சுங்ககேட்டில் நேற்று காலை 8:30 மணியளவில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி, சாதனைகள் குறித்து துண்டு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், தொகுதி பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் திருவிக, குளித்தலை ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சந்திரசேகர். இளங்குமரன், விஜயவிநாயகம், ரங்கசாமி, நகர செயலாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், சாலையில் இரு புறங்களில் உள்ள வணிக நிறுவனங்களின் பணியாளர்கள், பொதுமக்கள், பஸ் பயணிகள், பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர், தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்து துண்டு நோட்டீஸ்கள் வழங்கி, மீண்டும் தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையில் அ.தி.மு.க., அரசு அமைய வேண்டும் எனவும், அதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என, நிர்வாகிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். முன்னாள் அரசு வக்கீல்கள் காஜா, மனோகரன், மூர்த்தி, நாகராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.