உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலருக்கு காஸ் பிடித்த போதுதீக்காயமடைந்த முதியவர் பலி

டூவீலருக்கு காஸ் பிடித்த போதுதீக்காயமடைந்த முதியவர் பலி

டூவீலருக்கு காஸ் பிடித்த போதுதீக்காயமடைந்த முதியவர் பலிகரூர்:தென்னிலை அருகே, டூவீலருக்கு காஸ் பிடிக்கும் போது, தீ பிடித்து காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை அங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 66; இவர் கடந்த பிப்., 22ல், வீட்டில் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்குக்கு, காஸ் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென தீ பிடித்ததால், பழனிசாமிக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ