உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா

ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா

ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா கரூர்:கரூர் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை லதா மேரி செலின் தலைமை வகித்தார். பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் புகழூர் பி.எஸ்.எப்., துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, இடைநிலை ஆசிரியை காந்திமதி, கரூர் புனித தெரசா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோரை வாழ்த்தி, தேவி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா பேசினார். நிகழ்ச்சியில், பசுபதிபாளையம் புனித மரியன்னை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின் சகாயராஜ், கரூர் வ.உ.சி., பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் ஜெபராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை