கரூர் கலெக்டர் அலுவலகம் முன்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்கரூர்:-கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாயனுார் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் அருகில் மாயனுார் காவிரி கதவணை திட்டத்திற்கு, 2008ல் நிலம் கையகப்படுத்தப்பட்ட, 38 விவசாயிகளுக்கு, நீர்வளத்துறை, வருவாய் துறை இதுநாள் வரை இழப்பீடு வழங்கவில்லை. இதை கண்டித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன், மா.கம்யூ., மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.