உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநிறைவு, ஏமாற்றம் கலந்த பட்ஜெட்கரூர் மாவட்ட விவசாயிகள் கருத்து

மனநிறைவு, ஏமாற்றம் கலந்த பட்ஜெட்கரூர் மாவட்ட விவசாயிகள் கருத்து

மனநிறைவு, ஏமாற்றம் கலந்த பட்ஜெட்கரூர் மாவட்ட விவசாயிகள் கருத்துகரூர்:தமிழக வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு, மனநிறைவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன, மாநில இணை செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன்: தமிழகத்தில், 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா, 1,000 மெ.டன் கொள் ளளவு கொண்ட சேமிப்பு கிடங் குகள் அமைக் கப்படும். இதற்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது நல்ல அம்சம். 1,000 இடங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. முன்னோடி விவசாயிகளை ஜப்பான், சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அழைத்து சென்று, அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலாளர், சாமி. நடராஜன்: வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட் டங்களுக்காக 45,661 கோடி ரூபாய் ஒதுக் கப்பட்டுள் ளது. சிறு, குறு விவசாயி களுக்கு இயந் திரங்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்டு வந்த மானியம், 5௦ சதவீதத்திலிருந்து, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான, கட்டுப்படியான விலை கொடுப் பதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை. நெல் குவிண்டாலுக்கு, 2,50௦ ரூபாய், கரும்பிற்கு டன்னிற்கு 4,000 ரூபாய் விலை கொடுக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப் படாமல் உள்ளது.காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர், எஸ்.ஜெயராமன்: தமிழக வேளாண் பட்ஜெட்டில், 2024-25ம் ஆண்டு என்ன செய்யப்பட்டது என்று கூறப் பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டு என்ன புதிய திட்டங்கள் என்று முறை யான அறிவிப்பு இல்லை. கடந்த நிதியாண்டின் சாதனை விளக்க பட்ஜெட் தேவை யா. புதிய திட்டங்கள் இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடியாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்: தென்னை மரத்தில் ஏராளமான நோய் தாக்கு தல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் இல்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடை யில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. கொப்பரை தேங் காய்க்கு உரிய விலை கிடைக்க வில்லை. கூட்டுறவு சங்கங்கள் மூலம், தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிப்பு திட்டம் இல்லை.காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம்: தமிழ்நாடு வேளாண் வளர்ச்சி யில், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்ஜெட் மூலம் முதல் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. வேளாண் பட்ட தாரிகள் மூலம், 1,௦00 உழவர் சேவை மையம் அமைக்கப்படும், இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆக்கிட திட்டம், இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சிக்கு உதவும். காப்பீட்டு திட்டத்திற்கு, 841 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது போதுமானதல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ