உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரைவிழாவில் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரைவிழாவில் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

கரூர்:கரூர், வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவில், 25ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த, 7-ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 8-ல் திருவிளக்கு பூஜை, 11ல் பூச்சொரிதல் விழா, 13ல் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அமராவதி ஆற்றில் இருந்து, தாரை தப்பட்டை முழங்க பால் குடம் திருவீதி உலா ஜவஹர் பஜார், மாரியம்மன் கோவில் தெரு, கரூர் பஸ் ஸ்டாண்ட், தின்னப்பா கார்னர், ரத்தினம் சாலை வழியாக வலம் வந்து பிறகு கோவில் சென்றடைந்தது. எடுத்து வரப்பட்ட தீர்த்தக்குடம், பால் குடங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, 6:00 மணிக்கு கரகம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை