உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

கரூர், கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் தனுஷ் கோடி, 20; இவர், 17 வயது சிறுமியை கடந்தாண்டு டிச., 26ல் காட்டாம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது, மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் ராணி, 55, கரூர் ரூரல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் மேனகா, சிறுமியை திருமணம் செய்து கொண்ட தனுஷ்கோடி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !