உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது

பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது

கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலையில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மேலப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, அதே பகுதியை சேர்ந்த அஜய், 26; சிவா, 37; அருள்ஜோதி, 30; ஆகிய மூன்று பேரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர். அதேபோல், தான்தோன்றிமலை குறிஞ்சி நகர் பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, பாலசுப்பிரமணியன், 32; மகேந்திரன், 31; பிரகாஷ்வேல், 36; ஆகிய மூன்று பேரை, தான்தோன்றிமலை எஸ்.ஐ., விசாலாட்சி கைது செய்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !