உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாரச்சந்தை விரிவுபடுத்தப்படுமா?

வாரச்சந்தை விரிவுபடுத்தப்படுமா?

குளித்தலை : குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டியில், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக வியாழன் தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தோகைமலை, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, நச்சலுார், நங்கவரம், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள், பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், பணிக்கம்பட்டியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்துள்ள காய்கறி, கீரை வகைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவு இந்த வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இடப்பற்றாக்குறையாக இருப்பதால், வாரச்சந்தையை விரிவுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை