மேலும் செய்திகள்
சேதமான பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் கடும் அவதி
15-Sep-2024
கரூர்: கரூர் அருகே, முட்புதருக்குள் உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-வாங்கல் சாலை, மேல சக்கரம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை, வாங்கலில் இருந்து, கரூர் டவுன் பகுதிகளுக்கு, பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடத்தில் முட்புதர்கள் அதிகளவில் முளைத்து, சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சேதம் அடைந்த, பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
15-Sep-2024