உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரங்கநாத சுவாமி கோவிலில்ராஜ தர்பார் அலங்காரத்தில் சேவை

ரங்கநாத சுவாமி கோவிலில்ராஜ தர்பார் அலங்காரத்தில் சேவை

ரங்கநாத சுவாமி கோவிலில்ராஜ தர்பார் அலங்காரத்தில் சேவைகரூர்:அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று ஏழாம் நாள் ராப்பத்து உற்சவத்தில், ராஜ தர்பார் அலங்காரத்தில் சுவாமி சேவை சாதித்தார்.கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9ல், இரவு மூலவர் மோகினி அலங்காரம் மற்றும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, நாள்தோறும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று ஏழாவது நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ச்சியாக நடந்த திருவீதி உலாவில், ராஜதர்பார் அலங்காரத்தில் எழுந்துஅருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை