மேலும் செய்திகள்
பெண் தொழிலாளி மொபட் திருட்டு
15-Jan-2025
கரூர், வாங்கலில் இரு பெண்கள் மாயம்கரூர்,:கரூர் மற்றும் வாங்கலில் இரண்டு இளம் பெண்களை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கரூர், நிலிமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சாருமதி, 22. இவர் கடந்த, 6ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும், சாருமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சாருமதியின் தந்தை சரவணன், 51, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்த, ரமேஷ் என்பவரது மனைவி கீர்த்தனா, 24; இவர் கடந்த, 5ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பிறகு, இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கீர்த்தனாவின் கணவர் ரமேஷ், 35; போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Jan-2025