மேலும் செய்திகள்
பைக் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
05-Mar-2025
வாலிபரிடம் பணம் பறிப்புஆந்திர தம்பதியர் கைதுகரூர்:க.பரமத்தி அருகே, வாலிபரிடம் பணம் பறித்த, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்குமார், 30; இவர் நேற்று முன்தினம், க.பரமத்தி- சின்னதாராபுரம் சாலை மித்ரா கார்டன் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது காரில் சென்ற ஒரு கும்பல், வினோத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 1,250 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து, வினோத்குமார் போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில் நேற்று, வினோத்குமாரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனுபடி சாய் தேஜா, 27, கம்மா சங்கரம்மா, 25, பாலாஜி, 19, ஆகிய மூன்று பேரை, க.பரமத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய இட்டியாஸ் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட, மூன்று பேர் மீது, ஆந்திரா மாநிலத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
05-Mar-2025