கோவை சாலையில் தள்ளுவண்டிகள்அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி
கோவை சாலையில் தள்ளுவண்டிகள்அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடிகரூர்:கரூரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, தள்ளுவண்டிகளை போலீசார் அகற்றினர்.கரூர், கோவை சாலை வழியாக மதுரை, ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன. மேலும், கோவை சாலையில் வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள், தங்கும் விடுதிகள், ஜவுளி நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்படுகின்றன.இதனால், கோவை சாலையில் செல்லும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், கரூர்-கோவை சாலையில் தள்ளுவண்டிகள் மூலம், பல்வேறு உணவு பொருட்களை, சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.அதன் காரணமாக, சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டிகளை, போக்குவரத்து போலீசார் அகற்றினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.