அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா
அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டாகிருஷ்ணராயபுரம்:மகாதானபுரம் நெடுஞ்சாலை அருகில் உள்ள, நிழற்கூடம் அசுத்தமாக இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-திருச்சி நெடுஞ்சாலை மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர், திருச்சி செல்லும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் வாழை இலை கட்டு மற்றும் பானிபூரி கடைகள் மூலம் பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் கப்புகள் நிழற்கூடம் பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த இடம் அசுத்தம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.