அரசு பள்ளி கழிவுநீர் கால்வாய்க்குகான்கிரீட் மேடை அமைக்கலாமே
அரசு பள்ளி கழிவுநீர் கால்வாய்க்குகான்கிரீட் மேடை அமைக்கலாமேஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வெளிப்புறம் கழிவுநீர் கால்வாய்க்கு, கான்கிரீட் மேடை அமைத்து தர வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சியில் உள்ள, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை ஒட்டி, பல ஆண்டுகளாக கான்கிரீட் மேடை இல்லாமல், கழிவு நீர் கால்வாய் செல்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. இப்பணியால், கழிவுநீர் கால்வாய் சாலையின் மட்டத்தை விட ஒரு அடிக்கும் தாழ்வாக சென்று விட்டது. மேலும் மழை காலங்களில், கான்கிரீட் மேடை இல்லாததால் மாணவியர் தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்பு, பள்ளப்பட்டியில் சிறுவன் ஒருவன் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல மீண்டும் சம்பவம் நடந்து விடாமல் தடுக்க, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வெளிப்புறம் கான்கிரீட் மேடை அமைத்து தர வேண்டும்.