உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலீசாரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி.,

போலீசாரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி.,

போலீசாரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி.,கரூர்:கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், போலீசாரின் வாரிசுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக காவல் துறை சார்பில், போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 16 போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு, 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார். அப்போது, ஏ.டி.எஸ்.பி.,க்கள் பிரேம் ஆனந்த், ஜெகநாதன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி