உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையை மறித்து ஊர்வலம் குளித்தலை போலீசார் வழக்கு

சாலையை மறித்து ஊர்வலம் குளித்தலை போலீசார் வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த, சங்கிலிராயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித், 26, பிரபாகரன், 25, யுவராஜ், 25, அஜய், 25, மற்றும் பலர் நேற்று முன்தினம் மதியம், 12:00 மணியளவில் குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மணத்தட்டை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்துக்கொண்டு, கரூர் - திருச்சி நெடுஞ்சாலை வழியாக சென்றனர். அப்போது, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலையை மறித்தது தொடர்பாக, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதேபோல், 700 மங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், 45, மற்றும் சிலர் கடம்பன்துறை காவிரி ஆற்றில் இருந்து, மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது, சார் பதிவாளர் அலுவலகம் முன் சாலையை மறித்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்தனர். இது குறித்தும், குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி