உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிலப்பிரச்னை தகராறில் தாக்குதல்2 பேர் கைது; 2 பேர் தலைமறைவு

நிலப்பிரச்னை தகராறில் தாக்குதல்2 பேர் கைது; 2 பேர் தலைமறைவு

நிலப்பிரச்னை தகராறில் தாக்குதல்2 பேர் கைது; 2 பேர் தலைமறைவுகுளித்தலை,: குளித்தலை அடுத்த வீரியம் பாளையம் பஞ்., மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 37; பாப்பையம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன்; இவர்கள் இருவரிடையே நிலப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த, 5ல் ராமச்சந்திரன், தனக்கு சொந்தமான தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டிருந்தார். உடன் அவரது தந்தை வேலுச்சாமி, 65, மற்றும் தாயார் இருந்தனர். அந்த சமயம், பூபாலனுக்கும், ராமச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பூபாலன் மற்றும் உறவினர்கள் அன்னதாசன், 34, ஜீவானந்தம், 29, குட்டியப்பன் ஆகியோர் சேர்ந்து, ராமச்சந்திரன், இவரது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். காயமடைந்த வேலுச்சாமி, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ராமச்சந்திரன் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்னதாசன், ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பூபாலன், குட்டியப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை