| ADDED : ஜூலை 12, 2011 12:15 AM
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள மாயனூர் தடுப்பணையிலிருந்து தென்கரை வாய்க்கால் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி தடுப்பணை மூலம், பாசனத்திற்காக கட்டø ள தென்கரை வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய மூ ன்று முக்கிய வாய்க்கால்களை பயன்படுத்தி வந்தனர். இதனா ல், 30 ஆயிரத்து 316 ஹெக்டர் பரx` ப்பளவில் விவசாயத்துக்கு நேரடியாக பாசன தண்ணீர் வசதி கிடைக்கிறது. கடந்த மாதம் பாச ன வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக தடுப்பணை மூடப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால், தடுப்பணை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். தடுப்பணை திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ், குளித்தலை எம்.எல். ஏ., பாப்பாசுந்தரம் ஆகியோர் பங்கேற்று பாசனத்திற்காக தடு ப்பணையை திறந்து வைத்தனர். குளித்தலை கோட்ட பாசன அ லுவலர் நேரு, மாயனூர் காவிரி ஆற்று பாசன அலுவலர் தர்மலிங்கம், கிருஷ்ணராயபுரம் மே ற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, தொகுதி செயலாளர் நகுல்சாமி, ஜெ.,பேரவை மாவட்ட துணைதலைவர் சிவநேசன் உட்பட பலர் உடனிருந்தனர். பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் நெல் மற்றும் வாழை, வெற்றிலை சாகுபடி பணிகள் செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.