மேலும் செய்திகள்
உளுந்து அறுவடை பணி: தொழிலாளர்கள் தீவிரம்
19-Jan-2025
காய்கறி சாகுபடி பணி தீவிரம்கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், விளை நிலங்களில் பரவலாக காய்கறி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், பஞ்சப்பட்டி, அந்தரப்பட்டி, சிவாயம், மலையாண்டிப்பட்டி, வாத்திக்கவுண்டனுார், குளத்துார், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள், பரவலாக காய்கறி சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக கத்திரிக்காய், சுரைக்காய், தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றின் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர்.செடிகளில் விளைந்த காய்கறிகள் பறிக்கப்பட்டு, உள்ளூர் வாரச்சந்தைகள் மற்றும் கரூர், குளித்தலை, தோகைமலை ஆகிய இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. கடந்தாண்டு பெய்த மழையால், காய்கறி சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
19-Jan-2025