உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலை யூனியன் ஆபீஸில்மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

தோகைமலை யூனியன் ஆபீஸில்மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

தோகைமலை யூனியன் ஆபீஸில்மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்குளித்தலை:குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் அலுவலக வளாகத்தில், கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக, சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய புள்ளியியல் ஆய்வாளர் சுகுணா, செயல் திறன் உதவியாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள மனவளர்ச்சி குன்றி யோர், புற உலக சிந்தனை குறைபாடு உள்ள குழந்தைகள், காது கேளாதோர், பார்வை குறைபாடுள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இயக்க குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனை அளிக்கப்பட்டது.மேலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டை, ரயில் மற்றும் பஸ் பயண சலுகைக்கு பரிந்துரை, உதவி உபகரணங்கள் வாங்குவதற்கு பரிந்துரை, மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு சேவை வழங்கப்பட்டது.எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், சிறப்பு கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் உள்பட இயன்முறை சிகிச்சையாளர்கள் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ