மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகளால் தொல்லை
05-Mar-2025
கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் இன்றி தவிப்புகரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஏராளமான அலுவலக பிரிவுகள் உள்ளன. நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம், மேலும் பல்வேறு காரணங்களுக்காக, தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அவர்கள் சிரமப்படுகின்றனர்.தற்போதைய நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வருகிறது. எனவே, கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் மக்கள் நலன் கருதி, சுத்தமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தொண்டு நிறுவனங்கள், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05-Mar-2025