உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அருகே மணல்கடத்திய வாகனங்கள் பறிமுதல்

குளித்தலை அருகே மணல்கடத்திய வாகனங்கள் பறிமுதல்

குளித்தலை அருகே மணல்கடத்திய வாகனங்கள் பறிமுதல்குளித்தலை:குளித்தலை அடுத்த, புனவாசிப்பட்டியில் அரசு அனுமதியின்றி, காவிரி மணலை டிப்பர் லாரியில் கடத்துவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அனுமதியில்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது. லாரி உரிமையாளர் சரவணன், வீரராக்கியம் டிரைவர் சுதாகர் மீது போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரை கைது செய்தனர்.* குளித்தலை அடுத்த, களத்துப்பட்டியில் விவசாயி தனது பட்டா நிலத்தில், அரசு அனுமதி இல்லாமல் பொக்லைன் மூலம் மண் எடுத்தார். இதையறிந்த நங்கவரம் போலீசார், பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து உரிமையாளர் மனோஜ், நிலத்தின் உரிமையாளர் முத்துசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதேபோல், குளித்தலை அடுத்த அய்யர் மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, தோகைமலையில் இருந்து குளித்தலை நோக்கி வேகமாக வந்த லாரியை, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ மறித்து சோதனை செய்தார். அப்போது அரசு அனுமதியின்றி அரலை கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் காவல்காரன்பட்டியை சேர்ந்த நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை