கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்எள் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்எள் சாகுபடி பணி மும்முரம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், எள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பஞ்சப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக எள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த தண்ணீர் கொண்டு பாய்ச்சப்படுகிறது. மேலும் கிணறுகளில் நீர்மட்டம் இருப்பதால், எள் சாகுபடி பணிகள் துரிதமாக துவங்கப்பட்டுள்ளது.நிலம் உழவு செய்யப்பட்டு, எள் துாவப்பட்டுள்ளது. இதில் செடிகள் வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் எள் ஒரு கிலோ, 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 120 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. 60 கிலோ கொண்ட மூட்டை, 7,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ரஸ்தாளி வாழைத்தார்