உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது

கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது

கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைதுகரூர்:கரூரில், கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழ் மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம், 43; இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே, டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார், 24; என்பவர், மகாலிங்கத்திடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்து, மகாலிங்கம் கொடுத்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். சஞ்சய்குமார் மீது, கரூர் டவுன் ஸ்டேஷனில், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை