மேலும் செய்திகள்
வாய்க்காலில் ஆகாயத்தாமரைவிவசாயிகள் பாதிப்பு
06-Mar-2025
காவிரி நீர் பற்றாக்குறைகடும் அவதியில் மக்கள்கிருஷ்ணராயபுரம்:வல்லம் கிராமத்தில், காவிரி குடிநீர் குறைவாக கிடைப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வல்லம் கிராமத்தில் உள்ள மக்களுக்கான குடிநீர், பிள்ளபாளையம் வாய்க்கால் கரை அருகில் போர்வெல் அமைத்து, அதன் மூலம் குடிநீர் தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த தண்ணீர், உப்பு நிறைந்து வருவதால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு காவிரி நீர் கிடைப்பதற்காக, ஒரு தண்ணீர் குழாய் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும், காவிரி நீர் கிடைக்கும் வகையில் தொட்டியில் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Mar-2025