உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழாகுளித்தலை:குளித்தலை அடுத்த, சின்னையப்பாளையம் பஞ்.. பெத்தாநாயக்கனுாரில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு, உடுமல் சீல்நாயக்கர் மந்தையில், மூக்காயி பட்டவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முதலாம் ஆண்டு மாலை தாண்டும் திருவிழா, நடத்துவதற்கு முடிவு செய்தனர். கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் சுவாமிக்கு சாட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.நேற்று முன்தினம் கோவில் முன்பாக சலை எருது மாடுகளுக்கு, 14 மந்தையர்கள் வரிசைப்படி வரவேற்று புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, கோவில் எதிரே, 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து, அனைத்து சலை எருது மாடுகளுக்கும் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடின.இதில் கரூர் மாவட்டம், சிவாயம் பஞ்., குப்பாச்சிப்பட்டி பகுதியில் உள்ள தாசில்பொம்மா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாகவும், திண்டுக்கல் மாவட்டம், கோப்பா நாயக்கர் மந்தை மாடு இரண்டாவதாகவும் தாண்டி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை