உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்புகரூர்:கரூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 167 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச், 3 முதல், 25 வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச், 5 முதல், 27 வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப்., 15 வரையும் பொதுத்தேர்வு நடக்கிறது.முன்னதாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த, 7 முதல், 14 வரை செய்முறை தேர்வு நடந்தது.தற்போது, பத்தாம் வகுப்புக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வு துவங்கியது. வரும், 28ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், 167 பள்ளிகளில் உள்ள மையங்களில், 14 ஆயிரத்து, 167 மாணவர், மாணவியர் செய்முறை தேர்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு நேரமும் செய்முறை தேர்வு நடக்கிறது. நேற்று அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ