உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / யூனியன் நடுநிலை பள்ளி 150 வது ஆண்டு விழா

யூனியன் நடுநிலை பள்ளி 150 வது ஆண்டு விழா

யூனியன் நடுநிலை பள்ளி 150 வது ஆண்டு விழாகுளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியின், 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.குளித்தலை வட்டார கல்வி அலுவலர் ரமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். முன்னாள் மாணவர்களான தொழிலதிபர் பிரபு, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன், டாக்டர் சரவணன், பேராசிரியர் குருநாதன், தொழிலதிபர் மாப்பிள்ளை மீரான். நங்கவரம் செயல் அலுவலர் காந்தரூபன், கவுன்சிலர் செந்தில் வேலன், தி.மு.க., நகர செயலர் முத்து உள்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி ஆண்டு அறிக்கையை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வாசித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். பின்னர், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி