மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில், காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இதில் வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கொண்டுவந்து, கதவணை அருகே உள்ள கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.சில நாட்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக, மீன்கள் வரத்தும் அதிகரித்துள்ளது. இதில் ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால் மீன் கிலோ, 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, மாயனுார், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள், மீன்களை அதிகளவில் வாங்கி சென்றனர்.