மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு காப்பு
கரூர்: கரூர் அருகே, விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் தராத, முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா நிஹாரிகா, 32; இவருக்கும், கோவையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம்குமார், 38, என்பவருக்கும் கடந்த, 2018ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப பிரச்னை கார-ணமாக விவாகரத்து பெற்ற, ரோஜா நிஹாரிகாவுக்கு மாதம், 9,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என, கரூர் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ராம்குமார் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதுகுறித்து, ரோஜா நிஹாரிகா கொடுத்த புகார்-படி, தான்தோன்றிமலை போலீசார் ராம்குமாரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.