உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர்: காவிரியில், தண்ணீர் அதிக அளவு வரும்போது பாதிக்கப்படக்-கூடும் இடங்களில் நிவாரண முகாம் கள் தயார்நிலையில் உள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனுார் கத-வணை உள்பட காவிரிக்கரையோரம் ஆகிய பகுதிகளில் முன்-னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் கூறியதாவது: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வ-ரத்து அதிகமாக உள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் பொது-மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடர்ந்து அறிவு-றுத்தப்பட்டு வருவதோடு, தாழ்வான பகுதிகளில் வசிப்போரை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்-ளது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மீட்-புப்பணிகள் துறை, போலீஸ், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை-யினர், காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் அளவை இரவு பக-லாக தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒலிப்-பெருக்கி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மூலமாக, பொது-மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் நீரில் இறங்கி குளித்தல், மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்-டுதல் போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தண்ணீர் அதிக அளவு வரும்போது பாதிக்கப்படக்-கூடும் என கருதப்படும் புகழுர் தவிட்டுப்பாளையத்தில் இரு இடங்கள், குளித்தலை கே.பேட்டை, மண்மங்கலம் வட்டம் நெரூர் தெற்கு ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நி-லையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.ஆய்வின்போது, டி.ஆர்.ஓ., கண்ணன், பொதுப்பணித்துறை (நீர்-வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணா உள்-பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ