மேலும் செய்திகள்
மாணவர்கள் சங்கமம்
28-Dec-2024
மோளையாண்டிபட்டியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்புஅரவக்குறிச்சி:பள்ளப்பட்டி அருகே, மோளையாண்டிபட்டி பகுதியில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, தற்போது முதியவர்களாகி இருக்கும் மாணவர்கள், தங்கள் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இந்த சந்திப்பில், 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்திய நற்பணி மன்ற தலைவரும், முன்னாள் மாணவருமான சசிகுமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வாக மட்டுமின்றி, தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. மேலும் ரங்கராஜ் நகர் பகுதியை சுற்றியும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
28-Dec-2024