உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்

வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்

வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலையில் ஷாநகர் கார்னர் பகுதி உள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை வேகத்தடை இல்லாததால் வேகமாக செல்கின்றன.இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. காலை, மாலை வேலைகளில் மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அச்சமடைகின்றனர்.இதே போல வயதானவர்கள், குழந்தைகள் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் பயத்துடனேயே சாலையை கடக்கின்றனர். எனவே மாணவ, மாணவியர், வயதானவர்கள் உள்ளிட்டோர் நலன் கருதி, ஷா நகர் கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை