மேலும் செய்திகள்
அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்
13-Mar-2025
மதுக்கடையால் போக்குவரத்துநெரிசல்: பொதுமக்கள் அவதிகரூர்:கரூர் நகரில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த, காமராஜ் தினசரி மார்க்கெட், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனால், அப்பகுதியில் நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு, மதுக்கடை செயல்படும் சாலை வழியாக பக்தர்கள் செல்ல வேண்டும். இதனால், அப்பகுதியில் குடிமகன்களால், பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுகிறது.இதனால், காமராஜ் தினசரி மார்க்கெட் அமைந்துள்ள, மதுபான கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை, வியாபாரிகள், பக்தர்கள், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.
13-Mar-2025