கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்
கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம் குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் உப்பாறு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 36, கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள், திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 இரவு 8:30 மணியளவில் தனது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அவர், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.