சேதமடைந்துள்ள பயணியர் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா
கரூர், கரூர்-சேலம் பழைய சாலை, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில், பயணிகள் வசதிக்காக, பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை, புகழூர், வேலாயுதம்பாளையம், தளவாப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதிகளுக்கு, டவுன் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்தது. இதனால், பயணிகள் அச்சத்துடன், அங்கு பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோடை மழை தொடங்கிய நிலையில், சேதம் அடைந்த, பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.