உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

கரூர், புன்னம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் நேற்று தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தனர். புகழூர் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், தினசரி செயல்பாடுகள் குறித்தும், தீயணைக்க எவ்வாறு அழைப்புகள் வரும், எவ்வாறு செல்வர் என விளக்கம் அளித்தார்.புகழூர் தபால் நிலையம் சென்ற மாணவ, மாணவியர் அங்கு தினசரி பதிவு செய்யப்படும் தபால்கள் குறித்தும், அது அனுப்பப்படும் விதம் குறித்தும், அனுப்பப்படும் தபால்கள் எத்தனை நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்தும் கேட்டறிந்தனர். அதுபோல வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும், வழக்குகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை