உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகையை பெறும் 1.69 லட்சம் பேர்

கரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகையை பெறும் 1.69 லட்சம் பேர்

கரூர், : ''கடந்த இரண்டரை ஆண்டுகளில், கரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை, 1,000 ரூபாயை, ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 729 பேர் பெறுகின்றனர்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.தமிழக அரசின், இரண்டரை ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா, நேற்று திருவள்ளுவர் மைதானத்தில் நடந்தது. கண்காட்சியை கலெக்டர் தங்கவேல் திறந்து வைத்து பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டு-களில், கரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை, 1,000 ரூபாயை, ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 729 பேர் பெறுகின்றனர். முதல்வர் காலை உணவு திட்டம் மூலம், 705 பள்ளிகளில் படித்து வரும், 25 ஆயிரத்து, 474 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். கட்டணம் இல்லாத பஸ் பயணம் திட்டத்தின் கீழ், ஏழு கோடி யே, 93 ஆயிரத்து, 326 பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்-ளனர்.புதுமை பெண் திட்டத்தின் கீழ், 2.73 லட்சம் மாணவிகள், 1,000 ரூபாய் உதவி தொகை பெறுகின்றனர். ஐந்து வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, மூன்று லட்சத்து, 22 ஆயிரத்து, 587 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும், 48 திட்டம் மூலம், 5,090 பேருக்கு, 3.55 கோடி ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்-டுள்ளது.இவ்வாறு பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, எஸ்.பி., பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல தலைவர் அன்பரசன், கவுன்-சிலர் நிவேதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை