உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொலை செய்யப்பட்ட ரவுடி மனைவி2வது முறையாக எஸ்.பி.,யிடம் மனு

கொலை செய்யப்பட்ட ரவுடி மனைவி2வது முறையாக எஸ்.பி.,யிடம் மனு

கொலை செய்யப்பட்ட ரவுடி மனைவி2வது முறையாக எஸ்.பி.,யிடம் மனுஈரோடு:சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஜான் மனைவி சரண்யா, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த, ௨௨ம் தேதி மனு அளித்தார்.அப்போது அவரிடம் போலீசார், நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்றும், தனது குடும்பத்தினருடன் வந்த சரண்யா, எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தார். இதுகுறித்து சரண்யா கூறியதாவது: கடந்த, 19ல் நசியனுாரில் என் கணவர் ஜான் வெட்டி கொலை செய்யப்பட்டார். சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றும் கொலைக்கு திட்டம் தீட்டிய முக்கிய நபர்களான செல்லதுரை மனைவிகள் ஜான்சிராணி, சுஜி, அவரது மாமியார் வளர்மதி, பேபி மற்றும் இலைக்கடை ரமேஷ் (எ) சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஜான்சிராணிதான் முக்கிய குற்றவாளி. அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவரை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். செல்லதுரையின் மனைவிகள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் உள்ள வாலிபர்களை சரணடைய செய்கின்றனர். இவ்வாறு சரண்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி