உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

கரூர்: அரவக்குறிச்சி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங் கூடலுார் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் ராஜா, 26; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை கடந்ததாண்டு அக்., 18ல் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அரவக்குறிச்சி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் பூர்ணம், 54; கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், கார்த்திக் ராஜா மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை