உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் கூடுதல் மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் கூடுதல் மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவை விட, நடப்பு ஆகஸ்ட் மாதம் வரை, 95.42 மி.மீ., மழை அதிகமாக பெய்துள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம், கலெக்டர் அலுவ-லக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 5,409 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.நெல் பயிர் சாகுபடிக்காக, 78 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுதானிய விதைகள், 15 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 344.12 மி.மீ., மழை பெய்-துள்ளது. கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவை விட, நடப்பு ஆகஸ்ட் மாதம் வரை, 95.42 மி.மீ., மழை அதிகமாக பெய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் வரை, 4,926 ெஹக்டேர் பரப்ப-ளவில் வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, ஆர்.டி.ஓ.,க்கள் முகமது பைசல், தனலட்சுமி உள்பட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.முன்னதாக, விவசாயிகள் குறைதீர் கூட்ட த்தில், பல்வேறு அரசு துறைகள் சார்பில், எட்டு விவசாயிகளுக்கு, 26 லட்சத்து, 89 ஆயி-ரத்து, 710 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை